பனீர் காலிப்ளவர் பணியாரம்

By Gayathri Kumar - மே 10, 2018


இது இதுவரை நான் செய்த சிறந்த பனீர் ரெசிபிக்களில் இதுவும் ஒன்றாகும். சாதாரணமாக பனீர் உபயோகித்து எந்த டிஷ் செய்தாலும் கடைசியில் அது பனீர் சாப்பிடுவது போலவே இருக்கும். சில நாட்களில் இது போர் அடித்து விடும். ஆகையால் பனீரை பனீர் டேஸ்ட் இல்லாமல் சமைப்பது ஒரு அறிய கலை.


இந்த பணியாரம் உங்களுக்கு பனீரை ஞாபகப்படுதாது. அப்படியே பருப்பு பணியாரம் சாப்பிட்டது போலவே இருக்கும்.
பனீர் என்பது குறைந்த கார்ப் உணவில் சைவர்களுக்கான புரத மூலமாகும். எங்கள் புரோட்டீன் மேக்ரோஸை கவனித்துக் கொள்வதற்காக 200 கிராம் பனீர் ஒரு நாளைக்கு கட்டாயம் எடுக்க வேண்டும். தினமும் தினமும் பனீரை ஒரே மாதிரி சாப்பிடுவது மிகவும் போரடிக்கிறது, அதனால் உங்கள் உணவை சுவாரசியமாக செய்ய புதிய உணவுகள் செய்ய முயற்சி செய்யுங்கள்.



தேவையான பொருட்கள்:

பனீர் - 150 கிராம்
காலிப்ளவர் - 1 கப் பொடியாக நறுக்கியது
இசாப்கோல் - 2 TBS
உப்பு ருசிக்கேற்ப
மிளகாய் தூள் சுவைக்கேற்ப
துருவிய கேரட் - 3 TBS
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி

செயல்முறை:

பணியாற சட்டியை நெய்  தடவி ரெடியாக வைத்து கொள்ளுங்கள்.
அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து மென்மையான மாவை தயார் செய்யவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி பணியார  குழிகளில் வைக்கவும்.
மிதமான தீயில் வேக வைத்து நன்றாக பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
இது கிட்டத்தட்ட 10 - 13 நிமிடங்கள் எடுக்கும்.
நீங்கள் அவசரப்பட்டால் பணியாரங்கள் உடைந்துவிடும். ஆகையால் பொறுமையாக இருக்கவும்.
பணியாரங்களை சட்னியுடன் பரிமாறவும்.


வீட்டில் பனீர் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். ரெசிபிக்கு இந்த லிங்கை சொடுக்குங்கள் 









  • Share:

You Might Also Like

0 கருத்துகள்