லோ கார்ப் பாஸ்டா பிரவுன் பட்டர் சாசுடன்

By Gayathri Kumar - மார்ச் 11, 2018



இத்தாலியன் பாஸ்டா மைதாவில் செய்வார்கள். அதை நாம் சாப்பிட முடியாது. நேற்று லோ கார்ப் பாஸ்டா முயற்சித்தேன். சூப்பராக இருந்தது. பாஸ்டா சாப்பிட ஆசையிருந்தால் இதை முயற்சித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த எந்த சாஸ் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.




low carb pasta with brown butter sauce

இந்த ரெசிபியில் முட்டை மற்று கிரீம் சீஸ் உள்ளது. கிரீம் சீஸ் கடையிலும் வாங்கலாம் அல்லது வீட்டிலேயே செய்யலாம். நான் வீட்டில் செய்த சீஸ் உபயோகித்திருக்கிறேன். உங்களுக்கு வீட்டில் செய்ய வேண்டுமென்றால் இந்த வீடியோ பாருங்கள்.



ப்லேவருக்கு நான் பேசில் சேர்த்துள்ளேன். உங்களிடம் எந்த இத்தாலியன் ஹெர்ப் இருந்தாலும் அதை சேர்க்கலாம்.





தேவையான பொருட்கள்:
முட்டை பாஸ்தா செய்ய:

முட்டை - 3
கிரீம் சீஸ் - 2 TBS
தேங்காய் மாவு (coconut flour) - 2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்க
சாஸ் செய்ய :
வெண்ணெய் - 2 TBS
உலர்ந்த பேசில் - 1 மேஜைகரண்டி
மிளகு மற்றும் உப்பு சுவைக்கேற்ப

செய்முறை :
ஒரு ஜாடியில் முட்டைகள், கிரீம் சீஸ், தேங்காய் மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு non stick panல் சிறிது மாவை ஊற்றி மெல்லிய தோசை போல் பரவ விடவும்.
சிறிய தீயில் வேக விடவும்.
வெந்தவுடன் அதை ஒரு cutting board க்கு மாற்றி ஆற விடவும்.
மீதியுள்ள மாவையும் இதே போல் தோசைகளாக செய்யவும்.
ஆறியவுடன் ஒரு கத்தியால் மெல்லிய பாஸ்டா போல் வெட்டவும்.
சாஸ் செய்ய ஆரம்பிக்கும் முன் பாஸ்டாவை ரெடியாக வைக்கவும்.
பானில் வெண்ணெய் சேர்க்கவும்.
அது உருகட்டும். பேசில் சேர்த்து நன்கு சிவக்கும் வரை சிறு தீயில் சமைக்கவும்..
உப்பு, மிளகு போடி சேர்த்து உடனே பாஸ்தாவையும் சேர்த்து நன்கு கலந்து உடனே பரிமாறவும்.
சுவையான லோ கார்ப் பாஸ்டா தயார்.












low carb pasta with brown butter sauce

  • Share:

You Might Also Like

0 கருத்துகள்