பனீர் சீஸ் பேக் / ரோஸ்ட்

By Gayathri Kumar - மார்ச் 21, 2018நான் யூடியூப்பில் எனது இந்திய லோ கார்ப் சமையல் சேனலை ஆரம்பித்தபோது, நான் தினமும் வீடியோக்களை தயாரித்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவற்றை எடிட் செய்ய எனக்கு நேரமில்லை. ஆகையால் ஒரு பெரிய பைலில் நிறைய வீடியோ சும்மா இருக்கிறது. சீக்கிரம் அவற்றை அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நாள் விரைவாக சமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த பனீர் ரெசிபிசெய்தேன். சுவைக்காக mozzarella சீஸை சேர்த்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது.  காரத்திற்கு வீட்டில் செய்த சிவப்பு மிளகாய் சாஸ் சேர்த்துக் கொண்டேன், ஆனால் நீங்கள் வீட்டில் சாஸ் இல்லை என்றால், அதற்கு பதிலாக சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள். ஆனால் சாஸ் உபயோகித்தால்  மிகவும் சுவையுள்ளதாக இருக்கிறது. எனது வலைப்பூவில் வீட்டில் சிவப்பு மிளகாய் சாஸ் தயாரிக்கும் செய்முறையை நீங்கள்பார்க்கலாம்.
பேக் செய்வது சமையல் செய்வதில் ஒரு சுலபமான முறை. அதனால் நான் இந்த பனீர் செய்ய என்னுடைய ஓவனை பயன்படுத்தி உள்ளேன். நீங்கள் MW ஓவனில் கூட இதை தயார் செய்யலாம். ஆனால் எந்த விதமான ஓவனும் இல்லை என்றால், சாதா அடுப்பிலும் இதை தயாரிக்கலாம். ஒரு சட்டியில் நெய் ஊற்றி பனீர் கலவையை ரோஸ்ட் செய்து இறுதியாக துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும். சுவை எந்த மாற்றமும் இருக்காது. தேவையான பொருட்கள் நெய்யில் ஒரு தேக்கரண்டி சேர்க்க வேண்டும்.தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்

குடை மிளகாய் - 3-4 மேஜைகரண்டி

துருவிய Mozzarella சீஸ் - 3 மேஜைகரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

வீட்டில் தயாரித்த சிவப்பு மிளகாய் சாஸ் - 1 மேஜைகரண்டிசெய்முறை:

200C க்கு ஓவனை ப்ரிஹீட் செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

கலவை மூன்று கிண்ணங்களில் சமமாக பிரிக்கவும்.

25 நிமிடங்கள் அவற்றை பேக் செய்யவும்.

ஓவனில் இருந்து பனீரை சூடாக பரிமாறவும்.  • Share:

You Might Also Like

0 கருத்துகள்