பனீர் கொழுக்கட்டை

By Gayathri Kumar - மே 09, 2018


பல முறை செய்து தோல்வியடைந்து பிறகு ஒரு வழியாக இந்த ரெசிபி முயற்சி செய்தேன். பார்க்கவும் சுவைக்கவும் அம்மிணி கொழுக்கட்டை மாதிரியே இருக்கும். தக்காளி சட்னியுடன் சேர்த்து சாபிட்டால் அருமையாக இருக்கும்.




இதற்கு வீட்டில் செய்த மலாய் பனீர் உபயோகித்தால் நன்றாக இருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன். வீடியோ பார்க்கவும். கடையில் வாங்கி செய்வதாக இருந்தால், துருவி, நன்றாக மசித்து பிறகு உபயோகிக்கவும்.



தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
தேங்காய் - 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
இசாப்கோல் - 2 TBS
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை  – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2


செயல்முறை:
ஒரு கிண்ணத்தில் மென்மையான பனீர், தேங்காய், உப்பு, இசாப்கோல் கலந்து மென்மையான மாவை பிசைந்து கொள்ளவும் .
சிறிய கொளுகட்டைகளாக உருட்டி கொள்ளவும்.
10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்க்கவும்.
தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை  மற்றும் உப்பு சேர்க்கவும்.
நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.





  • Share:

You Might Also Like

0 கருத்துகள்