பனீர் தோசை

By Gayathri Kumar - மார்ச் 12, 2018

நிறைய முறை தோல்வி அடைந்து ஒரு வழியாக இரும்பு தோசை கல்லில் முட்டை இல்லாத பனீர் தோசை முழுதாக சுட்டு விட்டேன். சாதாரணமாக கொத்து தோசை தான் வரும். தோசை சுட நீங்களும் கஷ்டப்படுபவராக இருந்தால் அடுத்த முறை நான் செய்தது போல் முயற்சி செய்யவும். தோசை பிய்ந்து போகாமல் வர வேண்டுமானால் சிறிய தீயிலே சுட வேண்டும். மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தோசை கொத்து தோசயாகதான் வரும். 




தேவையான் பொருட்கள்:
பனீர் - 200 gm
தேங்காய் ( சிறியது ) - அரை மூடி
இந்துப்பு தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
நெய்

செய்முறை:
முதலில் பனீரையும் தேங்காய் துருவலையும் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும். பிறகு 1 அல்லது 2 மேஜைக்கரண்டி நீர் விட்டு மிகவும் கெட்டியாக மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும். 
பனீர் ஒரு வகையான சீஸ் என்பதால் சூடு பட்டவுடன் உருகும். ஆகையால் அரைக்க தேவையான தண்ணீர் மட்டுமே விடவும். 
பச்சைமிளகாய் மற்றும் சீரகமும் சேர்த்து அரைத்து கொள்ளவும். 
தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். 
தோசை சட்டியை சூடு படுத்தி அதில் ஒரு கரண்டி பன்னீர் மாவை ஊற்றி தோசை வடிவத்தில் shape செய்யவும். ஊத்தப்பம் அளவு thickness இருக்க வேண்டும். 
சிறு தீயில் தான் வேக வைக்க வேண்டும். இல்லையென்றால் கருகிய தோசைதான் கிடைக்கும். 
தோசை ஊற்றியவுடன் பனீர் உருகி பெரிய தோசையாக ஆகும். 
தோசையை சுற்றி நெய் விட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் காத்திருக்கவும். 
அடியில் முறுகி கொஞ்சம் stiff ஆன பிறகுதான் அதை திருப்ப வேண்டும். 
சாப்ட் ஆக இருந்தால் இன்னும் சிறிது வேக விட்டு பிறகு திருப்பவும். 
திருப்பிய தோசை 1/2 நிமிடத்தில் எடுத்து விடலாம். 
உங்களுக்கு பிடித்த சட்னியுடன் enjoy!


  • Share:

You Might Also Like

0 கருத்துகள்