தக்காளி சாஸ்

By Gayathri Kumar - மார்ச் 13, 2018

Red chilly sauce ஐ தொடர்ந்து tomato sauce recipe போஸ்ட் செய்கிறேன். கட்லட் அல்லது friedரைஸ் செய்தால் தொட்டு கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். செய்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் மூன்று மாதத்திற்கு கெடாமல் நன்றாக இருக்கும்.




இந்த சாஸ் இருந்தால் Indo Chinese variety செய்ய மிகவும் வசதியாய் இருக்கும். இந்த ரெசிபியில் oregano சேர்த்தால் pizza sauce ம் ரெடி. நான் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்திருக்கிறேன். உங்களிடம் எந்த வினிகர் இருக்கிறதோ அதை உபயோகிக்கவும். வினிகர் தான் கெட்டு போகாமல் சாஸை பாதுகாக்கும்.




தேவையான பொருட்கள்:
நெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - 2 "துண்டு
ஒரு முழு பூண்டு
தக்காளி - 600 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்க
ஆப்பிள் சிடர் வினிகர் - 1/2 கப்

செயல்முறை:
ஒரு பாத்திரத்தில், நெய் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்குங்கள் .
பிறகு தக்காளி, சிவப்பு மிளகாய் தூள், வெள்ளை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் .
சிறு தீயில் பாத்திரத்தை மூடி வைத்து தக்காளி மசியும் வரை சமைக்கவும் .
தீயை நிறுத்தி கலவையை ஆற விடவும் .
மிக்ஸியில் இதை அரைக்கவும்.
ஒரு சல்லடையில் வடிகட்டினால் ஸ்மூத் ஆன சாஸ் கிடைக்கும் .
இறுதியில் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு ஜாடிக்கு மாற்றி பிரிட்ஜ் ல் வைக்கவும்.










  • Share:

You Might Also Like

0 கருத்துகள்