பசு மஞ்சள் கறிவேப்பிலை ஜூஸ்

By Gayathri Kumar - மார்ச் 15, 2018

எந்த டயட்டிலும் நீங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை தலை முடி இழப்பு. நான் என் டயட்
உணவை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த பிறகு, முடி உதிர்தலுக்கு நான் என்ன செய்தேன் 
என என்னிடம் அடிக்கடி கேட்க ஆரம்பித்தார்கள். பொதுவாக biotin மாத்திரை 
பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் நான் எந்த மருந்தையும் எடுத்தது கிடையாது. இயற்கையாக என்ன 
செய்யலாம் என்றே யோசித்தேன். நான் ஏற்கனவே கறிவேப்பிலை மற்றும் கீரை கலந்த ஜூஸ் 
ரெசிபி இந்த வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறேன். (ரெசிப்பிக்கு இணைப்பை கிளிக் செய்யவும்) 
சமீபத்தில் நான் இந்த பசு மஞ்சள் ஜூசை தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன், இது சுவையும் நன்றாக 
இருக்கிறது, மேலும் கூந்தல் இழப்புக்கும் ஒரு தீர்வாக இருக்கிறது. ஐந்தே நிமிடங்களில் 
இந்த ஜூசை நீங்கள் தயார் செய்து விடலாம்.




பசு மஞ்சள் பல மருத்துவ குணங்களைக். படுக்கைக்குச் செல்வதற்கு முன் நாங்கள் 
தினமும் பசு மஞ்சள் சிறிது எடுத்துக்கொள்கிறோம். டயட்டில் இருந்தாலும் சரி 
இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க பசு மஞ்சளை உங்கள் 
உணவில் பயன்படுத்துங்கள். நெல்லிக்காய், இஞ்சி ஆகிய இரண்டும் மருத்துவ குணங்கள்
 உடையது. சுவைக்காக எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன. என் மகள் கூட 
தினசரி இந்த சாறு ஒரு கப் பருகுகிறாள். உங்கள் குழந்தைகளை குடிக்க வைக்க 
முயற்சி செய்யுங்கள். 




3 நபர்களுக்கு

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 2

பசு மஞ்சள் – 2 துண்டு

இஞ்சி - 1" துண்டு

கறிவேப்பிலை - ஒரு கையளவு

எலுமிச்சை - 1

உப்பு ருசிக்கேற்ப



செய்முறை:

அனைத்து பொருட்களையும் கழுவவும்.

நெல்லிக்காய், இஞ்சி, பசு மஞ்சள், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸி ஜாரில்  போட்டு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

நன்றாக அரைத்து வேண்டிய தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.


சுவைக்கு எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சேர்க்கவும்.

உடனடியாக பரிமாறவும்.





  • Share:

You Might Also Like

0 கருத்துகள்